Monday, December 11, 2006

தமிழ் கலைச்சொற் தொகுப்பு - 10/2006

தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒவ்வொரு மாதமும் உரையாடித் தொகுக்கப்படும் தமிழ் கலைச்சொற்கள், இங்கு பட்டியலாக வெளியிடப்படும். இங்கு உள்ள சொற்கள் இறுதிப் பரிந்துரைகள் அல்ல. அப்படி ஒன்று இருக்கவும் முடியாது. இப்படியும் இதை தமிழில் சொல்லலாமே என்ற எங்கள் எண்ணமே இச்சொற் தொகுப்பு. சொற்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள, உரையாடல்களில் பங்கு எடுக்க, உங்கள் கருத்துக்களை தெரிவிக்க, இச்சொற்களுக்கான பெயர்க்காரணம் அறிய இன்றே தமிழ் விக்சனரி குழுமத்தில் இணையுங்கள்.

இப்படி நாங்கள் வெளியிடும் சொற்கள் தமிழ் வலைப்பதிவர்கள், தமிழ் இதழியலாளர்கள், தமிழ் மென்பொருள் உருவாக்குனர்கள் வழியாக பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இப்பட்டியலில் உள்ள பல சொற்கள் கணிமைச் சொற்கள். எனவே இவற்றை இச்சொற்களின் பொதுப் பொருளுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. எடுத்துக்காட்டுக்கு, character என்றால் குணம், கதைப்பாத்திரம் என்று அறிவோம். கணிமையில் இதற்கு வரியுரு என்று கலைச்சொல் ஆக்குகிறோம்.

 
ஆங்கிலச் சொல் - நிகரான தமிழ்ச் சொல்
album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சுநிரற் கொல்லி
application செயலி
architecture கட்டமைப்பு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD) இறுவட்டு
CD player குறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்முறை
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall அரண்
floppy நெகிழ்வட்டு
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter (computing) வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்து
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்று
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin (software) ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை
system அமையம் / கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail சிறுபடம்
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL முகவரி
version பதிப்பு
video நிகழ்படம்
view பார்க்க
virus (computers) நச்சுநிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்




குழுமம்: http://groups.google.com/group/tamil_wiktionary

இணையத்தளம்: http://ta.wiktionary.org

1 மறுமொழிகள்:

Anonymous said...

அஞ்சலியின் அம்மா எழுதுவது...

உங்களுக்கு தமிழின் மேல் இருக்கும் பற்று உங்கள் பதிவுகளில் தெரிகின்றது. பாராட்டுக்களும், தொடரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும். உங்கள் பதிவுகள் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. காரணம் நேரப் பற்றாக்குறைதான். நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்.

அஞ்சலியின் வலைப்பதிவில் வீடியோ வடிவில் பதிவிட சில தடவைகள் முயற்சித்தேன். ஆனால் அவை முழுமையான முயற்சிகளில்லை. காரணம் நேரப் பற்றாக்குறையுடன், கணினியில் எனக்கு போதிய அறிவும், அனுபவமும் இல்லாமையும்தான். விரைவில் அப்படிப் பதிவுகள் போட முயல்வேன். உங்களிடமும் உதவி பெறலாம்தானே? :)

சிறந்த வலைப்பதிவாளர் தெரிவிற்கு, அஞ்சலியின் வலைப் பதிவை பரிந்துரை செய்திருப்பதே மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவே பெரிய விடயம்தான்.

உங்களுடம் தொடர்பு கொள்ள உங்கள் ஈமெயிலைத் தேடினேன். உங்கள் வலைப் பதிவில் இல்லை. அஞ்சலியின் ஈமெயிலுக்கு, முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.