உங்கள் வாசகர்கள் உங்கள் வலைப்பதிவில் இருந்தே தமிழ் அகராதியை தேட வேண்டுமா?
மாஹிர் உருவாக்கிய கருவியின் இந்த நிரல்துண்டினை வெட்டி, உங்கள் பதிவின் (அல்லது தளத்தின்) வார்ப்புருவில் சேர்த்தால், உங்கள் தளத்தில் இருந்தே தமிழ் அகரமுதலியான தமிழ் விக்சனரி தளத்தை தேட இயலும்.
உங்கள் வலைப்பதிவு வார்ப்புருவில் முந்தைய படைப்புகளுக்கான நிரலுக்கு அடுத்து மேல் உள்ள நிரல் துண்டை சேருங்கள். எடுத்துக்காட்டுக்கு, என்னுடைய பிளாக்கர் வார்ப்புருவில் எப்படி சேர்த்தேன் என்று கீழே உள்ள படிமத்தை பாருங்கள். பிளாக்கர் வார்ப்புருவில் BloggerPreviousItems என்று வரும் வரிக்கு அடுத்து இந்த நிரல் துண்டை சேர்த்துள்ளேன்.
சரி, இதன் மூலம் சொற்களுக்கான பொருளை எப்படி அறிவது? இதை மாஹிரே அவரது வலைப்பதிவில் விளக்கி இருக்கிறார் பாருங்கள்.
விக்சனரி ஒரு தன்னார்வக் கூட்டு முயற்சி. எனவே இதில் பிழைகள் இருந்தால் தயவு செய்து அதை நீங்களே திருத்தலாம். அல்லது, எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள். விக்சனரி குறித்து மேலும் அறிய, என் முந்தைய இடுகையை பாருங்கள்.
நீங்கள் தேடும் சொல் இல்லாவிட்டால், இந்த முகவரியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இயன்ற அளவு விரைவில் தளத்தில் அதற்கான பொருளை சேர்ப்போம்.
அல்லது, நீங்கள் அறிய விரும்பும் சொற்களை பின்னூட்டுகளாக இந்த இடுகையில் கேளுங்கள்.
தமிழில் சொல் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால், இருக்கிற சொல்லை தெரியாமல் இருக்கலாமா? வளமான நம் தாய்தமிழ் மொழியை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் பிற மொழிச் சொற்களை பயன்படுத்துவது, வங்கி நிறைய பணம் வைத்துக் கொண்டு தெருத்தெருவாகப் பிச்சை எடுப்பது போலத் தான். இந்தக் குறையை போக்கத் தான் நாங்கள் தமிழ் விக்சனரி தளம் மூலம் முயல்கிறோம்.
அன்புடன்,
ரவி
6 மறுமொழிகள்:
ரவி,
மிக்க நன்றி.
தேவையான, அவசியமான பதிவு.
நன்றி
where is this blog
தமிழ்மணம் தேவையா? : ரவிசங்கர்
தமிழ்மணம், தேன்கூடு மற்றும் இன்ன பிற வலைப்பதிவுத் திரட்டிகளின் செயற்பாடு வரும் ஆண்டுகளில் நிறைய மாறும். இத்தளங்களுக்கான வருகைகள் கூடும். அதே வேளை அதன் முக்கியத்துவமும் வலைப்பதிவர்கள் ...
ஒரு சின்னப் பிழையால் குழப்பம் வந்து விட்டது. தமிழ்மணம் தேவையா என்ற இடுகை என் இன்னொரு வலைப்பதிவில் தற்போது இருக்கிறது.
பார்க்க
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_13.html
ரவி!
நல்ல உதவி!!
முயன்று பார்க்கிறேன்;
நன்றி
யோகன் பாரிஸ்
// வளமான நம் தாய்தமிழ் மொழியை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் பிற மொழிச் சொற்களை பயன்படுத்துவது, வங்கி நிறைய பணம் வைத்துக் கொண்டு தெருத்தெருவாகப் பிச்சை எடுப்பது போலத் தான்.//
மனதை தொட்ட சொற்றொடர்.
நன்றி
Post a Comment